Header image alt text

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்,

இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்பலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பேரணி இன்றுகாலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. Read more

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன. கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன. அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர். Read more