கென்யாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற நான்காவது உலக சுற்றாடல் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கென்யா சென்றனர். இந்நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 7.55 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.650 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.