Header image alt text

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்’ பதவி நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம். கே. எம். மன்சூர் ஏலவே பணியாற்றி வந்த நிலையில், புதிதாக கிழக்கு ஆளுநராக நியமனம் பெற்ற ஹிஸ்புல்லாவினால் புதிய பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டார். குறித்த நியமனத்துக்கு எதிராக எம்.கே.எம்.மன்சூரினால் ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த நியமனத்துக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 5ம் திகதி இடைக்கால தடை விதித்தது. Read more

இலங்கை வந்துள்ள ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார். Read more