திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்’ பதவி நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம். கே. எம். மன்சூர் ஏலவே பணியாற்றி வந்த நிலையில், புதிதாக கிழக்கு ஆளுநராக நியமனம் பெற்ற ஹிஸ்புல்லாவினால் புதிய பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டார். குறித்த நியமனத்துக்கு எதிராக எம்.கே.எம்.மன்சூரினால் ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த நியமனத்துக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 5ம் திகதி இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எம். சீ. சஃபருல்லாவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில், நாளைய தினம் நீதிமன்றின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.