புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள நாவலர் முன்பள்ளிக்கு 19,500 பெறுமதியான இரும்பு அலுமாரி ஒன்று வழங்கிவைப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான க.சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று (19.03.2019) முற்பகல் 11.30மணியளவில் முன்பள்ளி ஆசிரியரிடம் மேற்படி அலுமாரியை கையளித்தார். இந் நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், கரைதுரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளருமான க.தவராஜா மாஸ்டர், கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் கணேசப்பிள்ளை, முன்பள்ளியின் பொருளாளர் மற்றும் முன்பள்ளியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.