Header image alt text

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவினை சேர்ந்த ஜோன் அண்டனி டினேஷ் என்ற 19வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது நண்பருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேளையில் கடல்காற்றின் வேகம் அதிகரித்தமையினால் படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், படகிலிருந்து இருவர் கடலில் மூழ்கியபோது ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளார். மற்றைய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு அவரின் சடலத்தை மீட்ட மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று அதிகாலை கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். Read more

வில்பத்து காடழிப்புக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக வில்பத்துவை பாதுகாப்போம் அமைப்பு கூறியுள்ளது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற வில்பத்து காடழிப்பு சம்பந்தமான தகவல்கள் அண்மையில் பெற்றுக்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் பாகியங்கல ஆனந்த சாகரதேரர் கூறியுள்ளார். குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்குறியது என்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி கூறியுள்ளார். Read more

கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை, இந்நாட்டின் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வதற்காக, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை, மனிதாபிமான ஆயுதக்களைவுக்காக முன்னிக்கும் அரசு என்ற அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.