கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை, இந்நாட்டின் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வதற்காக, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை, மனிதாபிமான ஆயுதக்களைவுக்காக முன்னிக்கும் அரசு என்ற அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.