யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவினை சேர்ந்த ஜோன் அண்டனி டினேஷ் என்ற 19வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது நண்பருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேளையில் கடல்காற்றின் வேகம் அதிகரித்தமையினால் படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், படகிலிருந்து இருவர் கடலில் மூழ்கியபோது ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளார். மற்றைய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு அவரின் சடலத்தை மீட்ட மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.