Header image alt text

வீட்டுத் திட்டத்துக்கான பணம் உரியமுறையில் வழங்கப்படவில்லையென தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராமத்து மக்கள் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறுகையில், வீடமைப்பு அதிகார சபையினால் 140 வீடுகள் எமது கிராமத்துக்கு வழங்கப்பட்டன. ஆதற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்தநிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையால் மிகுதி பணம் எமக்கு தரப்படவில்லை. நாம் காணி பத்திரங்களை ஈடு வைத்தும், கடன் பெற்றும் வீடுகளை பகுதியளவில் அமைத்துள்ள நிலையில் அதனை பூரணப்படுத்த முடிhயதநிலையில் இருக்கிறோம். Read more

மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இன்றுபிற்பகல் 2.15அளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலையமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்றைய தினம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதன்ரூ காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, Read more

முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை Online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை மார்ச் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர். Read more

இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பகுதிகளில் இருந்த காணிகள் இம் மாதம் (25)ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இராணுவம் தெரிவித்துள்ளது.

குச்சவெளி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதாகும். Read more