மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இன்றுபிற்பகல் 2.15அளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலையமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.