முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை Online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை மார்ச் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர்.

பிந்திய செய்தி : பாடசாலை பரீட்சைகளுக்காக ஒன்லைன் இணையத்தளம் மூலமாக இம்முறை மேற்கொள்ளப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.