வீட்டுத் திட்டத்துக்கான பணம் உரியமுறையில் வழங்கப்படவில்லையென தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராமத்து மக்கள் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறுகையில், வீடமைப்பு அதிகார சபையினால் 140 வீடுகள் எமது கிராமத்துக்கு வழங்கப்பட்டன. ஆதற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்தநிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையால் மிகுதி பணம் எமக்கு தரப்படவில்லை. நாம் காணி பத்திரங்களை ஈடு வைத்தும், கடன் பெற்றும் வீடுகளை பகுதியளவில் அமைத்துள்ள நிலையில் அதனை பூரணப்படுத்த முடிhயதநிலையில் இருக்கிறோம். இது தொடர்பாக வீடமைப்பு அதிகாரசபையிடம் கேட்டால் அத்றகான பணம் தமக்கு கிடைக்கவில்லையென கூறுகின்றார்கள். எனவே, எமக்கு வழங்கப்படNவுண்டிய மிகுதிப் பணத்தை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.