வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.