மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து இலங்கை சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை இல்ஙகை மீள புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, செழிப்பான எதிர்காலத்தையும் பெற முடியும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.