இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 9ம் திகதிவரை தியதலாவ முகாமில் இடம்பெறும் என இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கையில் 120 சிப்பாய்கள் வீதம் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா கடற்படைக்கு இடையில் முதன்முறையாக இடம்பெறும் பாரியளவிலான கடற்படைப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா கூட்டு குழு இன்று இலங்கை வந்துள்ளது. இந்த கூட்டு பயிற்சி எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த கடற்படை பயிற்சியில் அவுஸதிரேலியா கடற்படையின் 4 போர்க்கப்பல்களும், ஆயிரத்துக்கும் அதிகமான சிப்பாய்களும் கலந்து கொள்ளவுள்ளன.