மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேடப் படையணினியின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரிதும் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டபோது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன்,ந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் மேலும் தெரிவித்துள்ளார்.