அதிகரித்துள்ள மின்சார கேள்விக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால், சுழற்சி முறையினால் மின்சார விநியோகத் தடைக்கான கால அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

வெப்பமான வானிலையின் காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி பாரியளவில் அதிகரித்துள்ளதால் மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சனிக்கிழமை காலை 8.30 முதல் 10.45 வரையும், 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் 3.15 வரையும், 3.15 முதல் 5.30 வரையும் மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்விநியோகத் தடை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளைய தினம் காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30முதல் பிற்பகல் 5.30வரை மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், மாலை 6.30முதல் இரவு 7.30 வரை, இரவு 7.30 முதல் இரவு 8.30வரை மின்சார விநியோகத் தடை அமுலில் இருக்கும் மின்சார சபை அறிவித்துள்ளது.