வலப்பனை – நுவரெலியா வீதியின் மஹவுவவத்தை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரை சென்றவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்யே மஹவுவவத்தையிலுள்ள கோவிலுக்கு அருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.பிந்திய தகவலின்படி, வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28வயதான அம்பாறை இளைஞர் உயிரிழந்ததோடு, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாயொருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.