புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா வனிதா என்ற மாணவியின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு.

அனுப்பிவைத்த நிதியிலிருந்து இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுணதீவு பிரதேசசபை உபதலைவரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினருமான பொ.செல்லத்துரை(கேசவன்) அவர்கள் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து இன்று(25.03.2019) பிற்பகல் 3.30மணியளவில் மேற்படி துவிச்சக்கரவண்டியை வழங்கிவைத்தார். நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ந.ராகவன், கா.கமலநாதன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம்(கலன்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.