இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்துக்கு 3 லட்சத்து 37ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையின் செயலகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. மறுசீரமைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை இலங்கையில் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் 12 கள ஆய்வுப் பணிகளையும், 2021ம் ஆண்டில் இரண்டு கள ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் அறிக்கையிடல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் குறித்த நிதி அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.