புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவியான குமஸ்தகரன் சதுர்த்திகா என்ற மாணவிக்கு அவரது கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று (26.03.2019) துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து மூன்றாம் கட்ட உதவியாக இது வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுணதீவு பிரதேசசபை உபதலைவரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினருமான பொ.செல்லத்துரை(கேசவன்) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ந.ராகவன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கிருபா மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.