புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் புலேந்திரராசா அபிஷேக் என்ற மாணவனின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியிலிருந்து ஐந்தாம் கட்டமாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். இந் நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கா.கமலநாதன் மற்றும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம்(கலன்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.