Header image alt text

அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லை ஊடாக இலங்கை ஏதிலிகள் சிலர் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமெரிக்க நாடொன்றில் இருந்து அவர்கள் ஏனைய நாடுகளின் ஏதிலிகளுடன் இணைந்து எல்லைத்தாண்ட முற்பட்டுள்ளனர். கைதானவர்கள் டெக்ஸாஸ் எல்லைப் பாதுகாப்பு சபை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வந்தபோதே இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Read more

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்றுகாலைபதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி செய்த பரிந்துரைக்கு, அரசியலமைப்புப் பேரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஆயிரத்து 383 பேர் அன்றாடம்  சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது 414 மேற்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 383இற்கும் அதிக  மக்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் இங்குள்ள மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். Read more