வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர், வெளிநாடுகளில் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ள நபர்களுக்கு மீண்டும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த வேலைத்திட்டத்தன் மூலம் கிட்டுவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா, சுவீடன், நியுசிலாந்து, டென்மார்க், சுவிற்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழை வழங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.