Header image alt text

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வந்தபோதே இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Read more

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்றுகாலைபதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி செய்த பரிந்துரைக்கு, அரசியலமைப்புப் பேரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஆயிரத்து 383 பேர் அன்றாடம்  சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது 414 மேற்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 383இற்கும் அதிக  மக்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் இங்குள்ள மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் புலேந்திரராசா அபிஷேக் என்ற மாணவனின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியிலிருந்து ஐந்தாம் கட்டமாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். இந் நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கா.கமலநாதன் மற்றும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம்(கலன்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், இன்றுடன் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வைத்திய சேவையை நாடிச் செல்லும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்.

இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா தவசிகுளத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத் (ஓஹான்)திற்கு இன்று (26.03.2018) ரூபாய் 20,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்திற்கென வழங்கிய நிதியிலிருந்து நான்காம் கட்ட உதவியாக இது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களுள் ஒருவரும், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் நந்தகுமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.   Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவியான குமஸ்தகரன் சதுர்த்திகா என்ற மாணவிக்கு அவரது கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று (26.03.2019) துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து மூன்றாம் கட்ட உதவியாக இது வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுணதீவு பிரதேசசபை உபதலைவரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினருமான பொ.செல்லத்துரை(கேசவன்) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ந.ராகவன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கிருபா மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு கொண்டுவருவது தேசவிரோத செயற்பாடு என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான அவசியமோ, அவகாசமோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்று நாடு திரும்பிய நிலையில், கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கிய தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை தொடர்பாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா வனிதா என்ற மாணவியின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு. Read more