Header image alt text

இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்துக்கு 3 லட்சத்து 37ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையின் செயலகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. மறுசீரமைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை இலங்கையில் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் 12 கள ஆய்வுப் பணிகளையும், 2021ம் ஆண்டில் இரண்டு கள ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். Read more

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை மற்றும் புத்தர் சிலையை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகவும் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு சென்ற மக்களுக்கு எதிராகவும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டு முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

அதாவது தொல்பொருள் சின்னங்களை பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்தவர்கள் சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
Read more

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் பி.சமரசிறி மற்றும் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் பணிப்பாளர்கள் மூவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

மன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வர கோவிலின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், சட்டத்தரணி ஊடாக இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அருட்தந்தை ஒருவர் உட்பட 10 பேரே, இவ்வாறு இன்றுகாலை சட்டத்தரணி ஊடாக, மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்களில் மூன்று பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குகின்றனர். குறித்த 10 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். Read more

107.22 கிரோகிராம் ஹெரோய்னை மீன்பிடி படகில் கடத்தி வந்த நிலையில் காலி கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 9 ஈரானியர்களைத் தவிர்த்து இந்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 22 வெளிநாட்டவர்கள் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்களென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவர்களுள் 1 ஈரானியப் பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் ஜனவரி 31ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, 400 கிராம் குஷ் விஷப் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Read more

அதிகரித்துள்ள மின்சார கேள்விக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால், சுழற்சி முறையினால் மின்சார விநியோகத் தடைக்கான கால அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

வெப்பமான வானிலையின் காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி பாரியளவில் அதிகரித்துள்ளதால் மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சனிக்கிழமை காலை 8.30 முதல் 10.45 வரையும், 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் 3.15 வரையும், 3.15 முதல் 5.30 வரையும் மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. Read more

வலப்பனை – நுவரெலியா வீதியின் மஹவுவவத்தை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரை சென்றவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்யே மஹவுவவத்தையிலுள்ள கோவிலுக்கு அருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

இலங்கையிலிருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, கைமாற்றல் சட்டத்தின் கீழ், ஆறு நாடுகளில், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரிகள் 50 பேர், தற்போது, இந்தியா, டுபாய், இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் மறைந்திருப்பதாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேடப் படையணினியின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரிதும் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டபோது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்துக்கு இன்றும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, நல்லூர்க் கந்தன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்., தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்சுமி பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்றிட்ட மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீசுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்றிட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.