தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு அலகபுரி, இராமநாதபுரம், வட்டக்கச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய கருப்பையா சத்யவேல் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் குளிக்க சென்ற போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.