Header image alt text

ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை, பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி, தடுத்து நிறுத்திய சம்பவம் இன்றும் இடம்பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச பொறியியலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம், புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்றபோதே, வீதி தடைகளை ஏற்படுத்தி, பெண் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னோக்கிச் செல்லவிடாது, தடுத்து நிறுத்தியுள்ளனர். Read more

தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் 11 இலங்கை ஏதிலிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இலங்கைத் தமிழர்களான தயானந்தன், றொபின் பிரசாந்த், சாந்தரூபன், சத்தியசீலன், தயாகரன், கோபிநாத், குருவிந்தன், சுதர்ஷன், பிரபாகரன், ரமேஷ், தர்ஷன் ஆகிய 11பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றுலா சென்றபோது குறித்த இலங்கையர்கள் 11பேரும் காவல்துறையினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டனர். Read more

அலரி மாளிகையில் STF (விசேட அதிரடிப்படை) வீரரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அலரிமாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இந்த வீரர் இன்றுகாலை 8.30மணியளவில் பாதுகாப்பு கடமையில் இருந்துபோது தற்கொலை செய்துகொண்டுள்ளார். வரக்காபொல, கந்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தில்ருக்ஷ சமரசிங்க என்பவரே உயிரிழந்தவராவார். Read more

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட, நான்காவது தடவையாக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் தற்போது, வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில், வாக்மூலம் வழங்கவே, அத்மிரல் வசந்த கரன்னாகொட இன்றைய தினமும்,குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத காட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஆணொருவரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் எனும் 25 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more