அலரி மாளிகையில் STF (விசேட அதிரடிப்படை) வீரரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அலரிமாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இந்த வீரர் இன்றுகாலை 8.30மணியளவில் பாதுகாப்பு கடமையில் இருந்துபோது தற்கொலை செய்துகொண்டுள்ளார். வரக்காபொல, கந்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தில்ருக்ஷ சமரசிங்க என்பவரே உயிரிழந்தவராவார். தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.