மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத காட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஆணொருவரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் எனும் 25 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவதினமான நேற்று மாலை தனது காட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்குச் சென்றுள்ளார். அந்தவேளையில் தனது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.