Header image alt text

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 45 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டன.

கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் முன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது. Read more

சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு முற்பட்ட 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்விக்கொள்கையின் மூலம் பிள்ளைகள் சிறப்பாக பரீட்சைகளில் சித்தியடைவதைப் போன்று அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று முற்பகல் கடவத்த மகா மாய மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய விளையாட்டரங்குடன் கூடிய இரண்டு மாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். Read more

தற்பொழுது நிலவும் வரட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இந்த காலநிலையின் காரணமாக குடிநீர்ப் பிரச்சனையும் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது.

விஷேடமாக களுத்துறையில் 50 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் நீர் தண்ணீருடன் கலந்திருப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு குடிநீர் பௌசர்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 பௌசர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். Read more

விபத்தில் முறிவடைந்த மின் கம்பத்தை அகற்றச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர் குறித்த கம்பம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்தார். நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கு வீரப்பிராய் என்னும் இடத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வல்லியானந்தம், தூன்னாலை வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் (வயது-51) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

கரணவாய் வீரப்பிராய் பகுதியில் உள்ள வீதி வழியாக லொறி ஒன்றும் கார் ஒன்றும் எதிர் எதிர் திசையில் வந்து வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட நிலையில் லொறி வீதியோரமாக நின்ற மின்சார, தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கம்பங்கள் முறிந்து லொறியில் சாய்ந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. Read more