2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 45 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டன.

கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் முன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது. ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து, ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி எதிர்த்து வாக்களித்தது. ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.