Header image alt text

கொமாண்டே படையணிக்கு புதிய தளபதியாக இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. கனேமுல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொமாண்டே படையணி தலைமையகத்தில் சம்பிரதாய நிகழ்வுடன் பதவி பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான கொமாண்டோ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா, இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் நிமித்தம் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா படையணியின் படை தளபதியாக முன்னர் பணியாற்றியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராகப் புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீதமிந்த, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, நேற்று ஆளுநரின் செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, ஆளுநர் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை நேற்று முன்தினம் அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கை படையினர் மற்றும் காவல்துறையினரை உள்ளீர்ப்பது தொடர்பாக நிலவும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. ரேணுக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்டமாக 25,000 ரூபா அபராதத்தை அறவிடும் வர்த்தமானி அறிவித்தல் அரசாஙகத்தினால் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி இப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த அபராதத் தொகை ஊடாக அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்லும் சட்டத்தை நீக்குதல் மற்றும், Read more

எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடருந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். வேதன பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளின் அடிப்படையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் இணைந்து கொள்ள உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது பாதுகாப்பு படையினர் வசம் 13,497 ஏக்கர் விஸ்தீரனமான காணியே உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழப்பு அபிவித்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுமார் 84 ஆயிரத்து 675 ஏக்கர் நிலம் அரச பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கடந்த வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இடம்பெற்ற மேற்படி விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தல்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குடும்பத் தலைவர் ஒருவரை கோடாரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர் தாக்குதலை மேற்கொண்டபோது, அவரது கையிலிருந்த கோடாரியை வாங்கியே எதிரி தாக்குதல் நடத்தியுள்ளமை சாட்சியங்களின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. எதிரி தற்காப்புக்காகவே அதனைச் செய்துள்ளார். அதனால் அவர் கொலை செய்யும் எண்ணத்துடன் இதனைச் செய்யவில்லை என்ற முடிவுக்கு மன்று வருகின்றது. Read more

வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும்’ என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி மாலை இடம்பெற்றது. வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. Read more

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் படைப்பிரிவிற்கு பாகிஸ்தான் அரசாங்கம் 15 கணனிகள் மற்றும் பிரதி எடுக்கும் கருவிகளை வழங்கியுள்ளது. இவை இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய தூதுவர் ஊடாக இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜென்ரல் ஷாஹிட் அகமட் ஹஷ்மற், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் மகேஷ் சேனநாயக்காவிடம் இவற்றை கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய தூதுவர், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் இலங்கை இராணுவம் ஆற்றி வரும் சேவைகளை பாராட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. Read more