ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை நேற்று முன்தினம் அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கை படையினர் மற்றும் காவல்துறையினரை உள்ளீர்ப்பது தொடர்பாக நிலவும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோ அன்ன மேரி கெம்கர்ஸ் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை நேற்று சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.