Header image alt text

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றுமாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். அவர் தனது விஜயத்தின்போது இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

அவருடன் மேலும் 07 இந்திய அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ உட்பட முப்படை அதிகாரிகளையும் இந்திய பாதுகாப்பு செயலாளர் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 761வது நாளாக இடம்பெற்றது.

தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எந்த ஒரு தரப்பும் பதில் கூறாத நிலையில் சர்வதேசத்தை நம்பி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். Read more

இந்தியாவிலிருந்து இராணுவ கப்பலொன்று இரண்டு நாள்களுக்கான நட்புறவுக்கான சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலிலிருந்து 61 இராணுவவீரர்கள் வருகைதந்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக இன்று வரவேற்றுள்ளனர்

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. ஆரம்ப கட்டமாக மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும். அதன்பின்னர் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாகவுள்ள வெற்றுக் காணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியை துப்பரவு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பெகோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் 2 பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகள், மகசின்கள் மற்றும் மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டன. Read more

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரா.சம்பந்தன் தெளிவுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில, வெடித்துச் சிதறியுள்ளன. 10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனியார் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் நிலக் காணியில் இருந்த குண்டுகளே, இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளன.

காணி உரிமையாளரால், இன்று சண்பகல் காணி துப்புரவு செய்யப்பட்டு தீ மூட்டப்பட்டது இதன்போது காணி நிலத்தில் மறைந்நிருந்த இருந்த குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணி உரிமையாளரும் வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிருந்ததால், தெய்வாதீனமாக அவ்விருவரும் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த மோதலின் போது உந்துருளிகள் இரண்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஓமந்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.