வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 761வது நாளாக இடம்பெற்றது.

தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எந்த ஒரு தரப்பும் பதில் கூறாத நிலையில் சர்வதேசத்தை நம்பி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெனிவாவில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுத்து தங்களை ஏமாற்றியுள்ளதாகவும் சர்வதேசம் தங்களுக்கு ஒரு நல்ல தீர்வைத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வட்டுவாகல் பிரதேசம் நோக்கி கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

தங்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக தங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்து தற்போது போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.