Header image alt text

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லi என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தரார். Read more

படுகொலை செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா நீதிமன்றத்திலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பாரென கூறப்படுகிறது.

நிறைவுகாண் வைத்திய சேவைக்குட்பட்ட தாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தாதியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர்களின் ஒன்றிணைந்த 16 தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்பகிஷ்பரிப்பு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தலைமறைவாகி உள்ளதுடன் பொலிஸார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Read more