நிறைவுகாண் வைத்திய சேவைக்குட்பட்ட தாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தாதியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர்களின் ஒன்றிணைந்த 16 தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்பகிஷ்பரிப்பு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.