Header image alt text

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சஞ்ஜய் மித்ரா நேற்று கொழும்பில் இடம்பெற்ற இந்திய – இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெணாண்டோவின் அழைப்பில் அவர் இலங்கை வந்துள்ளார். இந்தமாநாட்டில் கலந்து கொண்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யாழ்.புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான். இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்து வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது. Read more

மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசாங்கம் தொடரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையிலுள்ள பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து நோர்வே சுவிட்சர்லாந்து பிரிட்டன் மற்றும் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக 43வருடங்களின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. Read more

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கோட்டாவின் ஊடகப் பேச்சாளரான மிலிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமைத் தொடர்பில், எவ்வித அறிவிப்பும் அவரது கைகளுக்கு இதுவரை கிடைக்கவில்லையென கோட்டாவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read more

பாதாளக் குழு, போதை வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு இடம் மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மாதங்களுக்குள் கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை குற்றவிசாரணைப் பிரிவினரின் பொறுப்பின்கீழ் காணப்பட்ட பூஸா சிறைச்சாலையானது கடந்த வாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை கொற்றாவத்தையை சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி குறித்த நபர் வீட்டில் தனக்கு தானே உடலில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது மனைவியும் அயலவர்களும் தீயை அணைத்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர் Read more