தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை கொற்றாவத்தையை சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி குறித்த நபர் வீட்டில் தனக்கு தானே உடலில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது மனைவியும் அயலவர்களும் தீயை அணைத்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்பின்னர் அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று நிலையில், நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.