மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவ தினமான நேற்றுமுன்தினம் மாலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் ஜயங்கேணி பிரதேசத்தில் வைத்து 1 கைக்குண்டு 4 வாள்கள் உடன் 2 இளைஞர்களை கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் விபுலானந்தபுரம் ஜயங்கேணியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரிடம் இருந்து 1 கைக்குண்டும் 1 வாள் மற்றும் இரும்பு கம்பிகள் மீட்கப்பட்டது. அவ்வாறே பாரதிபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரிடமிருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.