நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே, மேற்கொள்ளப்பட இருந்த ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவிருந்தது.பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தாலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படடே குறித்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.