நிதி ​அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவரப்போவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடகக்கேந்திர நிலையத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.