ஐநா அமர்வு முடிந்துள்ளது. இரண்டு வருட கால அவகாசம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றமாட்டோம் என்று அரசு முரண்பாடான நிலைமையைக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: அரசாங்கத்தின் நிலைப்பாடு அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் நான் நம்பவில்லை அவர்கள் தங்களுடைய இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவார்கள் என்று. யரராக இருந்தாலும் தேசிய அரசாங்கம் என்று சொல்லலாம். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறோம் என்று அவர்கள் எதையும் கூறலாம். ஆனால் அவர்கள் மாறமாட்டார்கள்.

அதேநேரத்தில் ஐநாவின் இந்தத் தீர்மானம் இரண்டு வருடம் கால அவகாசம் கொடுத்தாலும் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம். கையெழுத்துப் போட்டிருக்கிறோம். ஐநாவின் ஸ்பெஷல் ரப்பட்டோர் ஆறு மாதத்திற்கு ஒருதடவை இலங்கை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

உண்மையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அது பெரிய அளவில் குறைவானதாக இருக்கலாம் தமிழ் மக்களுக்கு உதவாது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தாலும், எங்களுடைய பிரச்சினை சர்வதேச ரீதியில் ஒரு பேசுபொருளாக உயிர்ப்புடன் – எலைவாக – வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதற்கு இந்தத் தீர்மானம் அடிப்படையாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது இவ்வாறு இருக்கின்ற நேரத்திலே இந்த ஐநா மனித உரிமைப் பேரவை மட்டத்தில் இருந்து இந்தப் பிரச்சினையை மேல் நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழரசுக்கட்சி உட்பட நாங்கள் அனைத்துக் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறோம். ஐநா மனித உரிமைகள அமைப்பின் ஜெனரல் அசெம்பிளி அல்லது செக்குரிட்டி கவுன்சில் இவைகள் மூலம் ஒரு கீபொயின்டை ஒன்றை உருவாக்கி அதன் ஊடாகத்தான் ஒரு நியாயத்தை அடையலாம் என்று நினைக்கிறோம்.

அதைச் செய்வது மிகப் பெரிய வேலை என்று எங்களுக்குத் தெரியும். பெரியதைவிட மிகக் கஸ்டமானது என்றும் எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் மிகப் பெரிய பெரிய நாடுகளின் சம்மதம் அவற்றின் இன்வோல்வ்மென்ட் பங்களிப்பு இவைகள் எல்லாம் இதில் இருக்க வேண்டிய விடயம். இருந்தாலும் நாங்கள் இதனை முயற்சிக்க வேண்டும். முயற்சிப்போம்.

இந்த நேரத்தில் இன்னுமொரு விடயத்தை நாங்கள் கவனிக்க வேண்டும். இந்த பத்து வருடத்திற்குள் சிங்களத் தரப்புக்கள் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், ஒன்றாகத்தான் இருக்கி;ன்றார்கள். நாங்கள் தமிழ் தரப்புக்கள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கையை வைத்துக் கொண்டு அங்கு போகிறோம். இது வந்து மிகவும் பின்னடைவான விடயம்.

தமிழ் தரப்புக்கள் இந்த நிலைப்பாடு குறித்து, இங்கிருந்து ஆராய்ந்து எல்லோருக்கும் ஏற்புடையதாக அல்லது எல்லோரையும் ஏற்கச் செய்து, கட்சிகள் அதனை ஏற்கக் கூடியதாகக் கொன்வின்ஸ் பண்ணி நாங்கள் தமிழ்க்கட்சிகள் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அது முக்கியம். இங்கு நாங்கள் எங்களுக்குள் எந்த வகையிலும் பிரச்சினை படலாம். எங்களுக்குள் எத்தகைய வேறுபாடும் இருக்கலாம். அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்த விடயத்திலாவது, ஒன்றாக இருக்கக் கூடியதாக இருந்தால்தான், நாங்கள் இப்போது சிந்தித்துக்கொண்டிருக்கின்ற விடயத்தை சாத்தியமாக்கக் கூடியதாக இருக்கும்.

கேள்வி: ஐநா கட்டமைப்பின் ஊடாகத்தான் ஒரு தீர்ப்பாயத்தை நாடலாம் என்ற வகையிலான கருத்தை நீங்கள் முன்வைக்கின்றீர்கள். ஆனால், நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் அத்தகைய சர்வதேச விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே ஒரு கோரிக்தை தமிழர் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டிருக்கின்றதே. . . . . ?

பதில்: தமிழ்;த்தரப்பு மாத்திரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல முடியுமா, அதற்கான வலு எங்களிடம் இருக்கின்றதா என்ற கேள்விகள் இருக்கின்றன. ஏனென்றால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும்பொழுது அது யாராக இருந்தாலும், அதற்கு மிகப் பெரிய நாடொன்று பின்னணியில் இருந்தால்தான் அதனைச் செய்வதற்கான வசதிகள் இருக்கும். கடந்த காலங்களில் வௌ;வேறு இடங்களில் அவ்வாறுதான் நடந்திருக்கின்றது. அது எவராக இருந்தாலும்; அமெரிக்காவோ யாரோ வலுவான ஒரு சக்தி பின்னால் இருந்திருக்கின்றது. அத்தகைய வலு எங்களுக்கு இருக்கின்றதா என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தமட்டில், உள்நாட்டில் தமிழர் தரப்பில் நாங்கள் ஒன்றிணைந்து ஐநா கட்டமைப்புக்கு ஊடாக இந்த விவகாரத்தை ஒரு தீர்ப்பாயத்தை நோக்கி நகர்த்திச் செல்வது என்பதற்கு அப்பால், இலங்கைக்கு வெளியிலே ஒரு வழி இருக்கின்றது, அந்த வழியிலே நாங்கள் செல்லலாம். அதற்கான பலம் எங்களிடம் இருக்கின்றதென்றால், நிச்சயமாக அந்த வழியில் நாங்கள் செலலலாம். அந்த விடயத்தில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. அந்த வகையில்தான் நாங்கள் தமிழ்த் தரப்புக்கள் மாறி மாறி ஒவ்வொன்றைச் சொல்வதைக் காட்டிலும், அனவைருமாகக் கூடி, உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறினேன்.

இன்று ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இருந்தாலும் அவர்கள் அங்கு (ஜெனிவாவுக்குப்) போய் ஒன்றாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். எங்களால் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் இருக்கின்றது. ஒன்றிணைந்த அத்தகைய ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடு;க்க வேண்டும். ஏனென்றால், நாங்கள் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள். மிக பெருந்தொகையான மக்களை இழக்கக் கொடுத்தவர்கள். மிகப் பெரும்பான்மையானவர்களைக் காணாமல் ஆக்கக் கொடுத்தவர்கள். இப்படியெல்லாம் இருந்தும்கூட, எங்களால் ஒன்றிணைந்த ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல், இருக்கிறதென்றால், அது ஒரு மிகக் கேவலமான விடயம் என்றுகூடச் சொல்லலாம்.

கேள்வி: இந்த நிiiமையில் இருந்து மாற்றம் ஏற்படுவதற்குரிய அடையாளம் அல்லது சமிக்ஞை ஏதும் தெரிகின்றதா? அதாவது தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு சிந்தனையின் கீழ் ஒன்றுபடுதல் அல்லது ஓர் அணிக்குள் இருந்து செயற்படுவதற்கான ஒரு நிலைமை தெரிகின்றதா?

புதில்: அண்மையில் நாங்கள் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஜெனிவாவில் ஓரு மகஜரைக் கொடுத்திருக்கின்றோம். அந்த மகஜரில் கையெழுத்து வைக்காத போதிலும், தமிழரசுக்கட்சியும் ஓர் உடன்பாட்டில் இருக்கின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் அதில் கையெழுத்திட மறுத்து, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம் என அவர்கள் சொல்லவில்லை. ஆனால் கையெழுத்திட அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்று சிவாஜிலிங்கம் எனக்குச் சொன்னார். அதற்காக அவர்களை நாங்கள் விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்பதில்லை. எல்லோருமாக இருந்து முயற்சிகளைச் செய்ய வேண்டும். இந்த ஆறு பேருமே செயற்படத் தொடங்கினாலே மற்றவர்கள் வந்து இணைவதற்கான வசதியிருக்கும்.

இது சம்பந்தமாக மற்ற கட்சிகளுடன் நாங்கள் கதைத்திருகின்றோம். ஆகவே இதற்கான ஆரம்பங்களைச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதனை யார் செய்ய வேண்டும் என்பதில்லை. இதில் யாருக்கு பெயர் வரப்போகின்றது என்பதில்லை. யாராவது ஒருவர் இதற்கான முன்முயற்சியைத் தொடங்க வேண்டும். சரியான ஆள் தொடக்கினால் இந்த முயற்சி சரியாகவரும்.

கேள்வி: இந்த முறை ஜெனிவாவில் வழங்கப்பட்டு;ள்ள இரண்டு வருட கால அவகாசம் அல்லது இரண்டு வருட கண்காணிப்புக்கான காலம் என்பது அரசாங்கத்திற்கு அனுகூலமான ஒரு நிலைமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் இந்த ஜெனிவா அமர்வானது தமிழ் மக்கள் மத்தியில் – மத்தியில் ஓர் அதிருப்தி உணர்வை ஏற்படு;த்தியிருக்கின்றது. இந்த அதிருப்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதும் இருக்கின்றது. இந்த அதிருப்தியைப் போக்குவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்னவிதமான உபாயங்களைக் கையாளப் போகின்றது?

பதில்: மக்கள் மத்தியில் நிச்சயமாக ஓர் அதிருப்தி இருக்கின்றது. அதனை நாங்கள் அறிவோம். நான் ஆரம்பத்தில்; கூறியது போல இரண்டு வருட கால அவகாசம் என்று சொல்லப்படுகின்ற விடயம் உண்மையாகவே ஐநா சபை இரண்டு வருடங்களுக்கு இலங்கையைக் கண்காணிப்பதாக இருக்கும். சரி, இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவராமல் விட்டிருந்தால், இலங்கையை ஐநா மனித உரிமைப் பேரவையினால் இரண்டு வருடங்களுக்குக் கண்காணிக்கின்ற அந்த விடயமும் இல்லாமல் போயிருக்கும்.

எங்களுக்குத் தெரியும் எவ்வளவு காலத்திற்கு இழுத்தடித்து இதனை மறக்கடிக்கச் செய்ய முடியுமோ அதனை அரசாங்கம் -குறிப்பாக சிங்கள மக்கள் அதனைச் செய்வார்கள். அதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். அதில் சந்தேகமில்லை.
ஆகவே, நாங்கள் ஒன்றிணைந்து சர்வதேசத்திற்குத் திருப்தியளிக்கத்தக்க ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுக்கு எங்கெங்கெல்லாம் அரசியல் செல்வாக்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு முதலாவதாக உள்நாட்டில் உள்ள தமிழ்க்கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஓர் அணியில் இணைய வேண்டும், ஓர் அணியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதேபோன்று புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு அமைப்புக்கள் இருக்கின்றன. அவைகளுக்கிடையிலேயும் ஒற்றுமை இல்லை. அவைகளையும் ஒன்றிணைத்து, நாங்களும் ஒன்றிணைந்து அனைவரும் ஓர் அணியாகக் கூடி ஒன்றிணைந்த ஒரு தீர்மானத்தை முன்வைத்து, சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.

நாங்கள் இங்குள்ள தூதரகங்கள், மற்றும் இங்கு வரக்கூடிய இராஜதந்திரிகளின், ஆதரவைத் திரட்ட வேண்டும். அதேபோன்று புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் தங்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் ஆதரவைப் பெற முயற்சிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்டுவதென்பது சாதாரண விடயமல்ல. அது மிகப்பெரியதொரு கைங்கரியமாகும். அது இலகுவில் செய்து முடிக்கக் கூடிய விடயமல்ல.

இதற்கு முதலாவதாக சர்வதேசம் எங்களுடைய விவகாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும். எனவே சர்வதேசம் எங்களுடைய பிரச்சினையை மறக்காமல் இருப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை ஞாபகப்படுத்தி, தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றபோது, சர்வதேச அரங்கில் அது நிச்சயமாக ஒரு பேசுபொருளாக மாறும்.

நாங்கள் பிரிந்து நின்றால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலம் உடைக்கப்படும்

கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2016 ஆம் ஆண்டிலேயே அரசியல் தீர்வு முயற்சி வெற்றியளிக்கும் என்று தலைவர் சம்பந்தன் கூறியிருந்தார். துரதிஸ்டவசமாக அது நிறைவேறவில்லை. தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்த்திச் செல்ல முடியாமல் போய்விட்டது. அத்துடன், அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் கூடிய முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. இத்தகைய ஒரு பின்னணியில், இந்த வருடத்தை தேர்தல் வருடம் என்று சொல்கின்றார்கள். அந்த வகையில் அடுத்தடுத்து தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடுத்த கட்டமாக என்ன வகையான அரசியல் அணுகுமுறையைக் கையாளப் போகின்றது?

பதில்: சம்பந்தர் அண்ணன் ஒரு விடயம் சொல்வார். அவர் – தான் நம்பாமல் ஒரு விடயத்தைச் செய்யக் கூடாது என்று. ஆகவேதான் அரசியல் தீர்வுக்கான விடயத்தைத் தான் நம்பிச் செய்கிறேன் என என்னிடம் கூறுவார். மற்றவர்கள் செய்கின்றார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் நாங்கள் நம்பிச் செயற்பட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்கிறேன் என்று அவர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அதில் ஓரளவு உண்மை இருக்கின்றது என்றே நான் நம்புகிறேன்.

இருந்தாலும், எங்களைப் பொருத்தமட்டில், இதிலே நாங்கள் விசுவாசம் வைக்கவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் நான் ஓர் உபகுழுவில் தலைவராக இருந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். இருந்தாலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் எங்களுடைய பங்களிப்பு கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில் அது முக்கியம். நாங்களாகவே அந்தத் தொடர் நடவடிக்கைiயை உடைத்துவிட்டு வரக் கூடாது. வேண்டுமானால் அவர்கள் உடைக்கட்டும். இது எப்போதும் எனது மனதில் இருக்கின்றது.

நாங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் ஆலோசகர் ஜி.பார்த்தசாரதி அவர்களையும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களையும் நான் சந்தித்தேன். இந்த இரண்டு பேருமே எனக்கு ஒரு விடயத்தைச் சொன்னார்கள். நீங்கள் பேச்சுவார்த்தைகளை முறிக்க வேண்டாம். அவர்கள் பேச்சுவார்த்தைகளை முறிக்கட்டும் என்று மிகத் தெளிவாக எனக்குக் கூறினார்கள்.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறிய விடயம் முக்கியமானது. அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வரமாட்டார்கள். அதனால் பேச்சுவார்த்தைகளில் அவர்களை நம்ப முடியாது. இருந்தாலும், நீங்களாகவே பேச்சுவார்த்தைகளை முறித்துவிடக் கூடாது. அவ்வாறு முறித்துவிட வேண்டாம் என்று சொன்னார். அவர்கள் இருவரும் முதிர்ந்த அரசியல் ஞானம் உடையவர்கள். அவர்கள் சொன்ன விடயத்தில் ஒரு மூலோபாய உண்மை இருந்ததை நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.
அதுபோல, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு காணும் விடயத்திலும் அந்த மூலோபாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடான அரசியல் தீர்வு காணும் விடயங்கள் எல்லாவற்றிலுமே, ஓரளவுக்கு சர்வதேச அழுத்தமும் இருக்கின்றது. இ;ந்த விடயங்கள் நடக்க வேண்டும் என்பதில் சர்வதேசமும் ஆர்வமாக உள்ளது.

விடயத்தைக் குழப்பிவிட்டு அல்லது அதனை உடைத்துவிட்டு மீண்டும் நாங்கள் சர்வதேச நாடுகளிடம் சென்றால், நீங்கள் வருகின்றீர்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை உடைக்கின்றீர்கள். ஆகவே எங்களை விட்டுவிடுங்கள் என்ற பாணியிலேயே அவர்கள் சொல்வார்கள். அது சிங்கள அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அத்தகைய சந்தர்ப்பத்தை நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

அடுத்தது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தீவிரமாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஒரு விடயத்தை உணரவில்லை. இந்தப் பிரச்சினை இந்த மூன்று வருடங்களுக்கு உட்பட்டதல்ல. எழுபது வருடங்களாக இருக்கின்ற பிரச்சினை. தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் அதற்குப் பின்னர் விடுதலை இயக்கங்கள் அதிலும் முக்கியமாக விடுதலைப்புலிகள் மிகப் பலம்வாய்ந்த விடுதலை அமைப்பாக இருந்த காலத்தில் எல்லாம் கடந்த எழுபது வருடங்களாகவே நாங்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம்.

ஆனால் இப்போது அரசியல் ரீதியாக அரசியல் காரணங்களுக்காக இது ஏதோ தமிழ்த்தேசிய கூட்டமைப்புத்தான் தனியே பிழை விடுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புத்தான் தவறவிட்டுவிட்டது என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கப் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மையான நிலைமை என்னவென்றால், இந்த அரசாங்கங்கள் இப்படித்தான் செய்யும் என்பதைத் தெரிந்து கொண்டுதான் நாங்கள் செயற்படுகின்றோம். ஏனென்றால் இந்த முயற்சியை நாங்கள் கைவிட்டு விடக்கூடாது. முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மாற்று நடவடிக்கையாக எதனையும் செய்ய முடியாது. எனவே, இந்த முயற்சி தொடர வேண்டும்.

ஒருசிலர் சொல்லுவதுபோல் நாங்கள் அந்த முயற்சியில் இருந்து விலகி வந்து என்ன செய்வது? வுpலகி வந்து தமிழ் மக்கள் மத்தியில் ஒலிபெருக்கியை வைத்துப் பேசிக்கொண்டிருக்கலாம். விலகி வந்த அதைத்தான் செய்ய முடியும். அதன் மூலம் நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவையோ ஒத்துழைப்பையோ பெற முடியாது.

மாறாக இரு ஒரு பிரச்சினைதான் என்று ஒரு தலையிடியாக இருக்க வேண்டுமானால், நாங்கள அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். அவர்களுடன் அடிக்கடி பேச வேண்டும். அவர்கள் பிழை விடுகின்றார்கள் என்று கூற வேண்டும். இப்படியான நிலைமைகள் இருந்தால்தான், இங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்று சர்வதேசம் எங்களைப் பார்க்கும். எங்களுடைய பிரச்சினை குறித்து சர்வதேசத்தின் மத்தியில் ஓர் அரசியல் பிரக்ஞை இருக்கும். இதுதான் உண்மை என்று நான் நினைக்கிறேன். இது என்னுடைய சொந்தக் கருத்து. நான் அப்படித்தான் கருதுகிறேன். ஆகவே அரசாங்கத்துடனான எங்கேஜ்மென்ட் தொடர்புகள் தொடர வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற வேண்டும்.

ஆனால் சில விடயங்களில் நாங்கள் பிழை விட்டிருக்கின்றோம். எனக்கே அந்த அபிப்பிராயம் இருக்கின்றது. சில விடயங்களில் அளவுக்கு மீறி நாங்கள் அரசாங்கத்திற்குத் துணை நிற்பது போன்று எனக்குத் தோன்றுகின்றது. இருந்தாலும் இந்தக்கட்சிக் கோப்பை நாங்கள் உடைக்கமாட்டோம். அப்படி உடைப்பதாக இருந்தால் அதற்கு சரியான காலம் வரவேண்டும். சரியான காரணம் வரவேண்டும். அதுவரை இந்த முயற்சிகள் தொடர்வதற்கு இப்போது இருப்பவர்களில் சம்பந்தர் அண்ணனை ஒரு சரியான தலைவராக நான் பார்க்கிறேன். இது என்னுடைய சொந்த அபிப்பிராயம்.

எனவே, நாங்கள் இந்த முயற்சிகளைக் கைவிடக் கூடாது. இதை நாங்கள் தொடர்வோம். இதைவிட தற்செயலாக வெளியில் இருந்து சொல்லக் கூடியவர்கள் இதைவிடப் பலமாக எதையாவது செய்வார்களாக இருந்தால், அதை நாங்கள் வரவேற்போம். அந்த முயற்சி வெற்றியடையக் கூடிய வாய்ப்பு இருந்தால் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம். அதற்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம். இதுதான் நான் நினைக்கின்றேன் இன்று இருக்கக்கூடிய நிலைப்பாடு.

கேள்வி: இப்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சிங்களக் கட்சிகள் கொண்டிருக்கின்ற அதீத அரசியல் பிரவேசம் போன்றவை ஒரு பின்னடைவாக இருக்கின்றன. இத்தகைய பின்னடைவுகளுக்கு இடையில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாகக் கூறப்படுகின்றது. அந்தத் தேர்தலை எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்கொள்ளப் போகின்றது? என்ன வகையான உறுதிமொழிகளைக் கொடுத்து மக்களை அது தன்வசப்படுத்தப் போகின்றது?

பதில்: என்னைப் பொருத்தமட்டில் நிலைமைகளை நான் அப்படிப் பார்க்கவில்லை. நாங்கள் செய்வதை மக்களுக்கு எடுத்துக் கூறுவோம். நாங்கள் செய்வது சரியென்று மக்கள் கருதினால், அவர்கள் எங்களுக்கு வாக்களிக்கட்டும். எங்களைவிட வேறு யாரோ தேர்தலில் மக்களுடைய ஆதரவைக் கேட்பார்கள்தானே, அவர்கள் கூறுவது சரியென்று கருதினால், உண்மையாகவே தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்று யாரையாவது அடையாளம் கண்டால் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கட்டும். இது மக்களுடைய தீர்ப்புத்தானே? அதைவிடுத்து பொய்யான எதையாவது சொல்லி இதுவரையில் மக்களிடம் நான் வாக்கு கேட்டதில்லை. அப்படி கேட்கப் போவதுமில்லை. இது ஒன்று. இரண்டாவதாக இப்போது எனக்குள் இருக்கக்கூடிய முழுமையான பயம் என்னவென்றால், நீங்கள் கூறியதுபோன்று தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் வடக்கு கிழக்குப் பிரவேசம் மட்டுமல்ல. அவர்களுக்கு ஏ;ற்பட்டுள்ள வளர்ச்சி மற்றது எங்களுக்குள்ளேயே நாங்கள் எங்களைக் கூறு போடப்போகின்ற நிலைமை இவைகளினால் எங்களுக்கு பிரச்சினையொன்று உருவாகும்.

எப்படியென்றால் வாக்குகள் எல்லாம் சிதறப்பட்டு, பெரும்பான்மை அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு கணிசமான அளவு அங்கத்துவத்தைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகலாம். முக்கியமாக வன்னியிலே, மட்டக்களப்பு, அம்பாறை |இப்படியான இடங்களிலே இத்தகைய நிலைமை உருவாகலாம். யாழ்ப்பாணத்திலும் அந்த நிலைமை உருவாகலாம்.

ஆகவே நாங்கள் பிரிந்து நின்று கட்சிக்கொரு பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது சில இடங்களில் இருவராகவோ போகின்ற போது, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் பலம் உடைக்கப்படும். நான் பார்த்திருக்கின்றேன். எனக்குத் தெரியும். அது மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம். ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம். அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். அரசியல் ரீதியாக நாங்கள் உடைந்து செல்வதையே இவர்கள் விரும்புகின்றார்கள்.

அவ்வாறு உடைந்து செல்லும்பொழுது எங்களைக் கையாள்வது இலகுவாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அதிலே ஓர் உண்மை இருக்கின்றது. அவர்கள் எங்களைக் கையாள்வது மிக மிக இலகுவானதாக இருக்கும். ஆகவே, அந்த ஒரு விடயம் நடந்துவிடுமோ என்ற பயம் ஒன்று என்னுடைய அடிமனதிலே எப்போதும் இருக்கின்றது.

கேள்வி: அந்தப் பயத்தைப் போக்குவதற்கு என்ன வழி இருக்கின்றது?

பதில்: அந்தப் பயத்தைப் போக்குவதற்கு வழி நான் ஏற்கனவே சொல்லியதுபோல, ஒன்றுசேரக் கூடியவர்களை அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலே சேர்க்கக் கூடியவர்களைச் சேர்க்க வேண்டும். அல்லது கடந்த காலங்களிலே எங்களுக்குள்ளேயே மனக் கஸ்டங்கள், விரோதங்கள் இருந்து, அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்து வெளியேறியிருந்தால், அது யாராகவும் இருக்கலாம் அவர்கள் எல்லோரையும் அரவணைத்து நேர்மையாக, உண்மையாக ஓர் ஒற்றுமையை உருவாக்குவது ஒரு நல்ல வழி. அது நடக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை