பிரதமரால் எல்லை நிர்ணய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்பட்டால் விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த அறிக்கை ஜனாதிபதியால் வர்த்தமானியில் வௌியிடப்பட்டதன் பின்னர் மாகாண சபை சட்டமூலத்தை திருத்தி முரண்பாடு உள்ள பிரிவுகள் தவிர ஏனைய பிரதேசங்களுக்கு தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.

கலப்பு முறைக்கு தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அது சம்பந்தமாக மீளாய்வு செய்வதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஒக்டோபர் 28ம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட இருந்த போதிலும் இதுவரை அது ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த அறிக்கையை அவசரமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.