புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைகழக மாணவிக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக 25000/- வழங்கப்பட்டது.

கட்சியின் சுவிஸ் உறுப்பினர் திரு.தவராஜா (தேவன்) அவர்களால் வழங்கப்பட்ட மேற்படி நிதியை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களுள் ஒருவரும், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் மாணவியிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் , கட்சியின் நிர்வாக செயலாளர் ம.பத்மநாதன் , கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரவிச்சந்திரன், தமிழ் தேசிய இளைஞர் கழக இணைப்பாளர் கோபி (அமெரிக்கா) , செயலாளர் ஹரீஸ், அங்கத்தவர்கள் பாலா , அகிலன் , சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.