Header image alt text

துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று, அந்நாட்டு செய்தி நிறுவனமான எனடொலு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர் ஒருவரைத் தவிர பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், மொரோக்கோ, டியுனீசியா, ஈரான், ஈராக், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை லண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 2.30 மணியளவில் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த புகையிலை தோட்டத்தில் நால்வர் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். Read more

நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த மின்சார தேவையில் 50 சதவீதமான பகுதியை 2030ம் ஆண்டளவில் புதுபிக்கக் கூடிய வலுசக்தி மூலங்களிருந்து பெற்றுக்கொள்ள அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இதற்கமைய சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் மாதுருஓய நீர்த்தேக்கத்தில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பத்து மெகாவோட்ஸ் மின்சாரம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. Read more

திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு இளைஞரொருவர் இன்றுகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் என காவற்துறை தெரிவித்துள்ளனர்.

காதல் பிரச்சினையால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உந்துருளியில் பின்னால் அமர்ந்து வந்த சந்தேகநபர் உந்துருளியை செலுத்தி வந்த நபரின் கழுத்தை எதிர்பாராதவாறு அறுத்த நிலையில், காயமடைந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். Read more