துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று, அந்நாட்டு செய்தி நிறுவனமான எனடொலு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர் ஒருவரைத் தவிர பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், மொரோக்கோ, டியுனீசியா, ஈரான், ஈராக், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை லண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லுடன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தின்பேரில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.