இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், டொனியர் ரக கண்காணிப்பு விமானமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறதென, இந்தியாவின் டைமஸ் நியு செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் மாத்திரமின்றி தென் ஆசியாவின்  அனைத்து நாடுகளுடனும் தமது பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படவுள்ள டோனியர் விமானமானது ஜேர்மனின் அனுமதிப்பத்திர உரிமையுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் கடல், கடற்கரை பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியுமென இந்தியா குறிப்பிட்டுள்ளது.