முல்லைத்தீவு, வற்றாப்பளை சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணித்த கென்டேனர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சோதனைச்சாவடியை உடைத்துச் சென்றதால் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இராணுவத்தின் 6ஆவது படைப்பிரிவில் கடமையாற்றும் எச்.பி.எஸ் பத்திரண என்பவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.மேலும் ஒரு இராணுவ அதிகாரி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முள்ளியவளை பொலிஸார் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.